மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றவர்: யார் இந்த ஜோ பைடன் ? - ஓர் கண்ணோட்டம்

Published By: J.G.Stephan

08 Nov, 2020 | 02:20 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.

ஜோ பைடனின் குடும்ப பின்னணி


ஜோ பைடன் குடும்ப வாழ்வு பல சோகங்களால் ஆனதென்றே கூறலாம். 

ஜோ பைடன் செனட்டுக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்கும் சமயத்தில் அவருடைய மனைவி நெய்லியாவும், மகள் நவோமியும் கார் விபத்தொன்றில் மரணம் அடைந்தனர். அவருடைய இரு மகன்கள் பியூ, ஹன்டர் ஆகியோர் அந்த விபத்தில் காயமடைந்தனர்.




பின்னர் 2015 ஆம் ஆண்டில் மூளையில் கட்டி ஏற்பட்ட காரணத்தால், 46 ஆவது வயதில் அவரது மகனான பியூ இறந்துவிட்டார்.

இளம் வயதில் தனக்கு நெருக்கமானவர்களை இழந்து விட்டதால், அமெரிக்கர்களுடன் அவர் உறவை பேணிவந்தார்.

தன்னுடைய அரசியல் அதிகாரம் மற்றும் சொத்துகள் பற்றி கருதாமல், தன்னைப் போன்ற துயரத்தை சந்தித்தவர்களுக்கு அனுதாபம் காட்டி, அரவணைத்து வந்துள்ளார் பைடன். 

ஜோ பைடனின் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வை

எளிய தேர்தல் பரப்புரை, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் ஏனைய பிற நாட்டு வம்சாவளியினர் இடையே ஆதரவை பெருக்கியது.

தாழ்மையுடன்  நடந்து கொள்ளும் அவரது உயர் பண்பு, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்புக்கு நேர்மாறானது.


ஒபாமாவுக்கு  ஆதரவாக குரல் கொடுத்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா இருந்தபோது, அவருடன் இரண்டு பதவிக்காலங்களிலும் துணை ஜனாதிபதியாக ஜோ பைடன் பணியாற்றியிருக்கிறார் . 

அத்தோடு, அரசுப்பதவிகளில் தொடர்ச்சியாக  40 வருடங்கள் அனுபவத்தை அவர் பெற்றிருந்தார்.

அரசு மற்றும் அரசியல் உயர் பதவிகளை வகித்த போதும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் யோசித்து செயற்பட்டு வந்துள்ளார்.

ஒபாமாவை கறுப்பினத்தவர் ஆக அமெரிக்கா பார்த்தபோது அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டபோது, அவருக்கு கரம் கொடுக்கும் முகமாக வெள்ளையினத்தவரான ஜோ பைடன் தேர்தல் களத்தில் துணை நின்றார்.

ஒபாமா பெற்ற வெற்றியில் இவரது பங்களிப்பு அதிகம் என்பது அமெரிக்க அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. 



2012 ஆம் ஆண்டில் ஒரு பாலினத்தவர் திருமணத்தை பைடன் ஆதரித்தபோது, அதுவரை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்ட இந்த விவகாரத்தில், ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவே மௌனம் சாதித்த நிலையில், துணிச்சலுடன், என்னைப் பொருத்தவரை நிச்சயமாக பிரச்சினையில்லை என்று குரல் கொடுத்தார் பைடன்.

அவரது கருத்து சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளிவந்தன. அந்த விவகாரத்தில் ஒபாமாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

பொது நிகழ்ச்சிகளில் எல்லோரிடமும் எளிமையாக பழகும் பண்பு, அரவணைத்தல், நலம் விசாரித்தல் போன்ற குணங்கள், அவரை மிடில் கிளாஸ் ஜோ என்றே பலரும் அழைக்க காரணமாக அமைந்தது.

ஜோ பைடனின் அரசியல் வாழ்க்கை


ஜோ பைடன் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆறு முறை செனட்டர் ஆக இருந்துள்ளார்.



1972 ஆம் ஆண்டில் டெலவேர் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக செனட்டர் ஆன இவர், 1988 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு உள்கட்சி அளவில் நடந்த தேர்வின்போது அப்போதைய பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி தலைவர் நீல் கின்னாக்கின் உரையை தகவல் திருட்டு செய்த சர்ச்சையில் சிக்கினார்.

அப்போது `என் முன்னோர்கள் பென்சில்வேனியாவில் வடகிழக்குப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்தார்கள்'' என்று பிரச்சாரங்களில் அவர் கூறத்தொடங்கினார்.

அத்தோடு, தங்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று அவர் கோபமாக காட்டினார்.

ஆனால் அவருடைய முன்னோர்கள் யாருமே நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கவில்லை. பிரிட்டன் அரசியல்வாதி நீல் கின்னோக் என்பவருடைய உரையில் இருந்து அந்த வரியை (மற்றும் பல வரிகளை) அவர் எடுத்து பயன்படுத்தியுள்ளார். கின்னோக்கின் உறவினர்கள் உண்மையிலேயே சுரங்கத் தொழிலாளர்களாக இருந்தனர்.

பிறகு தனது தவறை ஒப்புக் கொண்ட பைடனுக்கு, நிதானம் தவறும் போக்கு காரணமாக அந்த வாய்ப்பு அவருக்கு பறிபோனது என தெரியவந்தது.

ஒரு கூட்டத்தில், தன்னுடைய அரசியல் அனுபவம் பற்றி 2012-ல் பெருமையாகக் குறிப்பிட்ட பைடன்,  ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் தெளிவாகப் பேசும், பளிச்சென்று, சுத்தமாக, நல்ல தோற்றம் உள்ள முதலாவது முக்கிய நபராக இருக்கிறார்'' என்று ஒபாமா பற்றி கூறியதன் பிறகும் அவருக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.

இந்த கருத்துக்குப் பிறகும், இப்போதைய தேர்தலையொட்டி கட்சி ரீதியிலான வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் பைடனுக்கு ஆதரவாக கருப்பினத்தவர்கள் அதிகமாக வாக்களித்தமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22