வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வொன்று நாளை (26) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நஷ்டஈடானது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச்  சென்று ஊனமுற்ற அல்லது உயிரிழந்த தொழிலாளர்களுக்காக வழங்கப்படவிருக்கின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் சமார்  65 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட இருக்கின்றதென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.