பொலிஸாரினால் நேற்று காலை 06 மணிமுதல் இன்று காலை 5 மணிவரரை மேல் மாகாணத்தில் நடத்தப்பட திடீர் சுற்றி வளைப்பில் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தமை மற்றும் பயன்படுத்ததியமை தொடர்பில் 62 பேரும் , ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 09 சந்தேக நபர்களும், கோடா வைத்திருந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மேல் மாகாணத்தில் பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் அதிகளவானோர் போதைப்பொருள் பாவனையில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.