தீபாவளியை வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுவோம் : புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

Published By: R. Kalaichelvan

08 Nov, 2020 | 12:54 PM
image

(க.பிரசன்னா)

தீபாவளி கொண்டாட்டங்களை மக்கள் வீடுகளிலேயே இருந்து பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதன் மூலம் கொரோனா மூலம் எதிர்நோக்கும் இன்னல்களை குறைத்துக்கொள்ள முடியுமென புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சமன்குமார் தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டத்தை குறைப்போம். ஏனெனில் மக்கள் கொரொனா காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கும் போது தீபாவளி முன்னிட்டு புத்தாடை மற்றும் தீபாவளி கொண்டாட்டத்துக்கான பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏற்படும் சனநெரிசல் நோய்த்தொற்றை பரப்பவல்லது.

இதை தடுக்க வீட்டிலேயே இருந்து தீபாவளியை கொண்டாடுவதினால் மக்களை கொரோனா தாக்காது என்பது எனது ஆலோசனை.

இம்முறை இந்துக்கள் வீடுகளிலேயே தீபத்திருநாளை கொண்டாடுங்கள் என்பதே எனது வேண்டுகோள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

அந்த காலத்தில் நரகாசுரனை முருகன் வதம்செய்து அவர் அழிந்த பின்னர்தான்  எமக்கு தீபாவளி கொண்டாட கிடைத்தது. இப்பொழுது நாம் வாழும் காலத்தின் நரகாசுரன் ஆகிய கொரோனாசுரனின் (கொரோனா) பிடியிலிருந்து உலகளாவிய ரீதியில் மக்கள் எப்போது விடுபடுகிறார்களோ அன்றுதான் எமக்கு தீபாவளி, புதுவருடம், பொங்கல் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டும்.

அதற்காக இந்து மக்கள் தீபாவளியை புறக்கணிக்க கூற வில்லை. அனைவரும் வீட்டில் மிகவும் எளிமையாக பாதுகாப்புடன் பண்டிகையை கொண்டாடுங்கள்.

இது பலகாரம் உண்னும் காலம் அல்ல. ஏழை வீட்டில் பட்டினியாக இருக்கும் காலம். அதனால் இந்துக்கள் அனைவரும் தீபாவளி தினத்தன்று  மாலை 6 மணிக்கு ஒற்றை தீபம் ஏற்றி கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர்நீத்த மக்களுக்காக பிரார்த்தனை செய்து இந்த தீபாவளியை எளிமையாகக் கொண்டாடுவோம் என கேட்டுக்கொள்வதோடு அனைவருக்கும் புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05