தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47 பேர் இன்று தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63,784 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டுவரும் 19 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,454 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்யவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்ட பின்  அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.