இந்தியா மற்றும்  மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான   முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சின்  காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 தனது  முதல்  இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கட்டுகளை இழந்து 566 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இந்திய அணி சார்பில்  சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 200 ஓட்டங்களை பெற்றதோடு, ரவிச்சந்திரன் அஸ்வின்  113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில்  பிராத்வைட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல்   243 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக கிராஜ் பிராத்வைட் 74 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்திய அணி சார்பில் மொஹமட் சமி மற்றும் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

மீண்டும் ஃபோலோவன் முறையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வினின் சுழலில் சிக்கி 231 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 92 ஒட்டங்களால் தோல்வி அடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் கார்லஸ் பிராத்வைட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார்.