ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம்,  வாடிக்கையாளர்களை மீண்டும் ஒரு முறை முன்னிலைப் படுத்தியுள்ளது. Sltgo Wi-Fi தீர்வின் அறிமுகத்துடன் SLT புரோட்பாண்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி,  இலங்கையின் சகல இணைய தள பாவனையாளர்களும் தங்களது பயணத்திலேயே சமூக Wi-Fi  வலையமைப்புகளின் ஊடாக இணைய தள வசதிகளை அனுபவத்திட முடியும்.

இந்த இணைப்பின் ஊடாக, உலகளாவிய ரீதியில் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படும் 23 மில்லியனுக்கும் அதிகமான Wi-Fi hotspot கள் இணைக்கப்படுகின்றன.

சமூக Wi-Fi வலையமைப்புக்கள்ரூபவ் மக்களுக்கு இணைய தள வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வயர்கள் அற்ற வலையமைப்பு ஒன்றினை உருவாக்கி, வேச்சுவலாக பொது மக்களுக்கான ஒரு Wi-Fi வலையமைப்பை உருவாக்குகிறது.

Fon Wireless Limited என்பது, உலகளாவிய ரீதியில் Wireless வலையமைப்புக்கள் தொடர்பான ஒரு முன்னணி நிறுவனமாகும். அது, வீடுகளில் WiFi Sharing வசதிகளை ஒரு தசாப்தத்திற்கு முன்னரே அறிமுகப்படுத்தியதில் முன்னோடி நிறுவனமாகும்.

இவ்வாறான அம்சங்களைக் கருத்திற் கொண்டு SLT, Fon Wireless  நிறுவனத்துடன் இணைந்து, SLT வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி, SLT வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கும் பொது மக்களுக்கான Wi-Fi இணைப்பை, பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறது.

Sltgo, இலங்கையின் மிகப் பெரிய Wi-Fi வலையமைப்பாகும். இதன்மூலம் உங்களது ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியில் எல்லையற்ற DATA பாவனைக்கும், முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, கையடக்கத் தொலைபேசி அல்லது லெப்டொப்களுக்கும் பெற்றுக் கொடுக்கின்றது.

ஏற்கனவே புரோட்பாண்ட் வசதிகளைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கும் இந்த னுயுவுயு வசதிகளுக்கு தமது வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் வெளியில் செல்லும் போது Sltgo app இனால் உங்களுக்கு அருகில் இருக்கும் Wi-Fi hotspot இல் உங்களை சுயமாகவே இணைத்து விடும்.

பாவனையாளர்கள் இந்த வசதிகளை இரண்டு முறைகளில் பெற்றுக்கொள்ள முடியும். SLT புரோட்பாண்ட் வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய பாவனையாளர் குறி (Username) மற்றும் இரகசியக் குறி (Password) என்பனவற்றை வழமைபோல் பயன்படுத்தினால் போதுமானது. ஏனைய வாடிக்கையாளர்கள் Wi-Fi Passes முற்கொடுப்பனவுத் தீர்வுகளாகக் கொள்வனவு செய்து இதனைப் பயன்படுத்த முடியும்.

Sltgo உங்களது இல்லங்களுக்கான புரோட்பாண்டில் மேலதிக Wi-Fi இணைப்பை உருவாக்கும். அதாவது, ஏற்கனவே உங்களுக்கென தனியாக இருக்கும் ஒரு இணைப்பும் Sltgo வாடிக்கையாளர்களுக்கென பொதுவான ஒரு இணைப்பும் உருவாக்கப்படும்.

இல்லங்களுக்கான இணைய தளத்தை பயன்படுத்தும் ஏனைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உங்களது வேகத்தை, உங்கள் பாவனைக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும். இதனால், உங்களுடைய புரோட்பாண்ட் அனுபவத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. பொது மக்களால் பயன்படுத்தப்படும் DATA உங்களது புரோட்பாண்ட் DATA வினால் குறைக்கப்படப் போவதுமில்லை.

இல்லங்களுக்கான  தனிப்பட்ட Wi-Fi signal Sltgo அல்லது Fon பொது சிக்னல்களில் இருந்து தனித்துசெயற்படும். அதனால், உங்கள் தகவல்கள் பொதுவான வலையமைப்புக்களில் இருந்து தனியாகப் பேணப்படும் என்பது உறுதியாகும்.

ஏற்கனவே SLT வாடிக்கையாளர்களான உங்களுக்கு 1212 என்ற இலக்கத்தை அழைத்து இந்தச் சேவையைச் செயற்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் புதிதாக SLT தீர்வு ஒன்றைக் கொள்வனவு செய்யும் போதுரூபவ் நீங்கள் சுயமாகவே கொடுப்பனவு அற்ற இந்த இலவச சேவையுடன் இணைக்கப்படுகின்றீர்கள்.

இந்தச் சேவையைச் செயற்படுத்திய பின்னர், நீங்கள் இலங்கையிலுள்ள சமூக வலையமைப்புக்களை உங்களால் Access செய்ய முடியும். Sltgo Mobile app இனைப் பயன்படுத்தி அல்லது Sltgo web portal ஐப் பயன்படுத்தி இதனை உங்களால் மேற்கொள்ள முடியும்.

நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது,  சமூக வலையமைப்புக்களைப் பயன்படுத்த Sltgo Mobile app இனை அல்லது Fon வலையமைப்பை உங்களது Wi-Fi தெரிவில் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். Mobile app இனைப் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் தங்களது SLT புரோட்பாண்ட் பாவனையாளர் குறி மற்றும் இரகசியக் குறி என்பனவற்றைப் பயன்படுத்தி செயற்படுத்த வேண்டும்.

Sltgo உங்கள் கருவியில் இருக்கும் போது,  சுயமாகவே Wi-Fi hotspot களுடன் அது இணைந்து விடுகிறது. அவ்வாறு சுயமாக முதல் முறை இணைக்கப்படவில்லை என்றால், உங்களது Wi-Fi settings இல் Sltgo வினைத் தெரிவு செய்து அவ்வாறு அதனைச் செயற்படுத்திக்கொள்ள முடியும். Sltgo app இல் காணப்படும் Find Hotspot என்ற வரைபடத்தில் அதனை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இது தொடர்பாக இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட SLT யின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கித்தி பெரேரா, ‘தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் என்ற வகையில், Fon Wireless Limited நிறுவனத்துடன் இணைந்து சமூக Wi-Fi வலையமைப்புக்களை கொண்டு வந்து சேர்ப்பதில் நாம் பெருமையடைகிறோம். அத்துடன், நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், எப்போதும் இணைந்திருக்க இதனால் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இணையத்துடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது அல்லது வெளிநாடு செல்லும் போது இதன் முக்கியத்துவம் மிகவும் அத்தியாவசியமாகும். இந்தப் பிரச்சினைக்கு SLT ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த தீர்வைப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பாக நாம் Fon Wireless Limited நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். எம்மோடு இணைந்து இதனை சாத்தியப்படுத்தியமைக்காகவும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்’ என்று கூறினார்.

இப்போது SLT வாடிக்கையாளர்களும்ரூபவ் SLT வாடிக்கையாளர் அல்லாதோரும் இந்தச் சேவையைச் செயற்படுத்திக்கொள்ள முடியும். சமூக Wi-Fi வலையமைப்புக்களை இலகுவாக வீடுகளில் இருந்தவாறே அல்லது வெளிநாடு செல்லும் போதும்ரூபவ் எங்கு சென்றாலும் Sltgo app மூலம் இணைந்தே செயற்பட முடியும்.