5600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் ஹொரணை, குருகொட ஆடைத் தொழிற்சாலையில்  பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று  குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் 81 ஊழியர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவ் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

மேலும் 2,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஹொரணை  நிர்வாக பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புளத்சிங்கள யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டு  ஊழியர்களுக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் நேற்றைய தினம் வரை 68 பேருக்கு கொரோானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.