பல்பொருள் அங்காடியொன்றில், பணி புரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலே பணி புரிந்த ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக, குறித்த யூனியன் பிளேஸில் கிளை மறு அறிவித்தல் வரை பூட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.