யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிதிவெடியொன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (06.11.2020) மாலை இடம்பெற்றது.


குறித்த பகுதியில் மாடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ள 22 வயதுடைய இளைஞர் ஒருவர், அங்கு மாட்டினைக் கட்டுவதற்காக நிலத்தில் துளையிட்டபோது நிலத்தின் கீழிருந்த மிதிவெடி வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.