கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க கொழும்பு கிழக்கு வைத்தியசாலையை சுகாதார அமைச்சு அமைத்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் இதுவரை 80 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் 28 பெண்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் அதில் 04 பெண்கள் ஆராக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.