கடன் செயற்திட்டத்தின் சலுகைக்காலம் நீடிப்பு குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

07 Nov, 2020 | 02:39 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நெருக்கடிக்குள்ளான வியாபார நடவடிக்கைகளை மீள வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் செயற்திட்டத்தின் சலுகைக்காலம் 6 மாநங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நெருக்கடிக்குள்ளான வியாபார நடவடிக்கைகளை மீள வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி அரசாங்கத்துடன் இணைந்து கடன்வழங்கல் செயற்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.

4 சதவீத வருடாந்த வட்டியுடன் 6 மாத சலுகைக்காலமும் உள்ளடங்கிய இந்தக் கடன்திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்கள் 24 மாதங்களுக்குள் திருப்பிச்செலுத்தப்பட வேண்டும்.

கொவிட் - 19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நிவாரணம் எனப் பெயரிடப்பட்ட இந்தக் கடன் வழங்கல் செயற்திட்டம் மூன்று கட்டங்களாக செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எது எவ்வாறெனுனும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காரணமாக, ஏற்கனவே கடன்பெற்ற பல தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் வலுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே கடனை மீளச்செலுத்துவதிலும் அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால், அவர்களுக்கு உதவும் நோக்கில் சலுகைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்குறிப்பிட்ட கடன் செயற்திட்டத்தின் கீழ் கடன்பெற்ற தொழில் முயற்சியாளர்கள், கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மேலும் 3 மாத சலுகைக்காலம் வழங்கப்படும்.

எனவே இக்கடனைப் பெற்றுக்கொண்டவர்கள் அந்தந்த வங்கிகளில் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்து மேலும் 3 மாத சலுகைக்காலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38