(க.பிரசன்னா)
எதிர்வரும் வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மஸ்கெலியா பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வெளியிட்டுள்ளதாக மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இம்முறை தீபாவளியை கொண்டாடுவதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து உங்கள் வீடுகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களை வரவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுத்தல், உறவினர்கள் அபாய வளையத்தில் இருந்து இங்கு வருவதனால் இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதி கூடிய அபாயம் உள்ளதால் அவற்றை தவிர்த்தல்.
அத்தோடு குறித்த அபாய பகுதிகளிலிருந்து மஸ்கெலியா பிரதேச எல்லைப் பகுதிகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு வருபவர்கள் அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், தேவையேற்படின் குறித்த பகுதிகளுக்கு வருகைத்தருபவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளிலுள்ள சகலரையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே சொந்த வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் பண்டிகை காலத்தையொட்டி உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வதுடன் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டு கொள்வதோடு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கவும் அவதானத்துடன் செயற்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மஸ்கெலியா பிரதேச சபைக்குட்ட பகுதிகளில் இன்று மாத்திரம் ஏழு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதேச சபைக்குட்பட்ட தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நகர் புறங்களில் சமூக இடைவெளியை பேணுவதற்கேற்ற வகையில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM