வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : இருவர் கைது

Published By: R. Kalaichelvan

07 Nov, 2020 | 01:53 PM
image

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் வீதி இரண்டாம் செங்கல்படை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்டவிருந்த முதிரை மரக்குற்றிகள் மற்றும் முதிரைப்பலகைகள்  என்பன பூவரசங்குளம் பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் முதிரைமரம் மற்றும் பலகைகள்  அறுக்கப்படுவதாகதாக பூவரசங்குளம்  பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  நேற்றுமாலை அப்பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிசாரும்  இரகசிய பொலிஸ் புலனாய்வாளர்களும் இணைந்து குறித்த மரக்கடத்தல்காரர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தில்  ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 முதிரை மரக்குற்றிகளும் 7 இலட்சம் பெறுமதியான முதிரைப்பலகைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும்  வவுனியா நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸ் பெறுப்பதிகாரி  எதிரிசூரிய தெரிவித்தார்.

இக்கடத்தல் தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14