அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுடனான  சந்திப்பு ஒன்று இன்று (07.11.2020) கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பனை தென்னை கூட்டுறவார்கள் பனை தென்னை கூட்டுறவாளர்களின் தேவைகள் கேட்டு அறியப்பட்டது.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஊடகவியலாளர்கள் பொது ஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்போதே  மேற்கொண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்தும் கோரிக்கைகள் ஆகவே உள்ளன, அந்தக் கோரிக்கைகளில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து  அரசாங்கம் நீதியான  தீர்வினை வழங்கும் என்று குறிப்பிட்டார்.

இதன் பொழுது ஊடகவியாளர் அரசியல்வாதிகளின் விடுதலை குறித்து நீங்கள் அழுத்தங்கள் கொடுத்து உள்ளீர்கள் என வினாவிய போது,

 நான் கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன் இருப்பினும் நான் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதாவது இவ்வாறான அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என்றார்.