வெள்ளை மாளிகையின் உயர் மட்ட அதிகாரியான மார்க் மெடோஸிற்கு (Mark Meadows) கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த செய்தி வருகிறது .

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.   தேர்தலில் அதிகாரிகள் பதட்டமான சூழ்நிலையில், வெள்ளை மாளிகைக்கு மேலும் அதிருப்தி அளித்துள்ளது.

61 வயதான மெடோஸ் செவ்வாயன்று இடம்பெற்ற தேர்தலுக்குப் பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக  மக்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், அவர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை  பின்பற்றவில்லை மற்றும் பெரும்பாலும் முகக்கவசம் அணியமலே காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் தனது இறுதி பிரச்சார நடவடிக்கைகளின் போது ட்ரம்புடன் பயணம் செய்துள்ளார்.

செவ்வாயன்று தனது பிரச்சார தலைமையகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியுடன் சென்று வெள்ளை மாளிகையின் தேர்தல் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார் . அந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் முகக்கவசம் அணிந்திருப்பதைக் காணவில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று நோய் பரவ தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் 236,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதுடன், 9.7 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.