அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  நாங்கள் வெல்லப் போகிறோம் என ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கு அருகில் இருக்கும் ஜோ பைடன் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். ஆனால் அதற்குள் நாம் கொண்டாட்டங்களை தொடங்கக் கூடாது. ஆனால் தற்போது இருக்கும் நிலவரத்தின்படி நம்முடைய வெற்றி உறுதியாகிவிட்டது.

நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறப் போகிறோம். நேற்று காலையில் இருந்து என்ன நடந்தது என்று பாருங்கள், 24 மணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. ஜோர்ஜியா, பென்சில்வேனியாவில் இப்போது நாம் தான் முன்னிலையில் இருக்கிறோம். நாம் இங்கே வெற்றிபெற போகிறோம்.

அரிசோனா, நெவாடாவிலும் நாம் வெற்றிபெற போகிறோம். 300 எலக்ட்ரோல் வாக்குகளை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம்.

பெரும்பான்மையுடன் நாம் இதை வெற்றிபெற போகிறோம். ஜனாதிபதி பதவி ஏற்றதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதல் வேலை. முதல் நாளில் இருந்து கொரோனாவை தடுப்பதற்காக திட்டங்களை வகுப்பேன்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் நாளில் இருந்து திட்டங்களை வகுப்பேன். மக்களை இந்த கொடிய கொள்ளை நோயில் இருந்து மீட்டு எடுப்பதே அரசின் முதல் கடமையாக இருக்கும், என்று பைடன் தெரிவித்துள்ளார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/137990/zoZM7JZ9.jfif

மேலும்,

கொரோனா வைரஸ், பொருளாதார சீர்குலைவு மற்றும் கடினமான பிரச்சாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் நாட்டில் ஆழமான பிளவுகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன்.

இருப்பினும், அமெரிக்கர்கள் "கோபத்தையும் அரக்கமயமாக்கலையும் எங்கள் பின்னால் வைக்க வேண்டும்"

"எங்களுக்கு கடுமையான பிரச்சினைகள் உள்ளன, பக்கச்சார்பான போரில் வீணடிக்க எங்களுக்கு இன்னும் நேரம் இல்லை.

"நாங்கள் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல."

அவர் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து, அனைத்து அமெரிக்கர்களுக்கும் நான் ஆட்சி செய்வேன் என தெரிவித்துள்ளார்.