தேசிய லொத்தர் சபைக்கு நஷ்டம் ஏற்றபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவிற்கு பிணை வழங்கி  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இவர் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாடு செல்ல தடை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு சில தனியார் நிறுவனங்களுக்கு இலாபம் ஏற்படும் வகையில், லொத்தர் சபையின் மூலம் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.