வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும்  30 பேர் நாட்டை வந்தடைந்தனர்.

அந்தவகையில் இந்தியாவின் சென்னையில் இருந்து 11 பேரும் , கட்டார் தோஹாவில் இருந்து 18 பேரும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் நாட்டிற்கு இன்று காலை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அபுதாபி, கத்தார் மற்றும் இந்தியாவில் இருந்து இன்று காலை 30 பேர் இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

எனினும் நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.