இலங்கையில் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டுவரும் இடங்களுள் ஒன்றாக  BMICH, எந்தவொரு நிகழ்வையும் முன்னெடுக்கக்கூடிய வகையில் எழில்மிகு மண்டபங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 

BMICH ஆனது அண்மையில் அதன் குழு அறைகளின் பெயர்களை இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பெயர்களை இட்டு வாடிக்கையாளர்களுக்கு மகத்தான அனுபவத்தை வழங்கவுள்ளது.

மிகவும் கவர்ச்சிகரமான சூழலில் அமைந்துள்ள புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள BMICH இன் புதிய மண்டபங்களானவை, இராப்போசன விருந்து, வர்த்தக மாநாடுகள் மற்றும் திருமண வைபங்கள் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வுக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளன.

குழு அறை ‘ஏ’ ஆனது சுமார் 450 பேர் வரை அமரக்கூடிய இடவசதியுடன் ‘ஜஸ்மின்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மண்டபம் செயலமர்வுகள் மற்றும் மாநாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அதிகபட்சம் 6 நடுவர்கள் அமர்வதற்கான மேடையுடன், இந்த குழு அறை வசதியைக் கொண்டுள்ளது.

குழு அறை ‘பி’ ஆனது 400 பேர் அமரக்கூடிய வகையில் திரையரங்கு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செயலமர்வுகள், மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள், கச்சேரிகள் மற்றும் கொக்டெய்ல்கள், விழாக்கள் மற்றும் அதிகபட்சம் 10 நடுவர்கள் அமரக்கூடிய மேடை அமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும் குழு அறைகளான ‘சி’ மற்றும் ‘டி’ ஆகியன முறையே ‘லெவெண்டர்’ மற்றும் ‘ஓர்ச்சிட்’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 1900 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு அறைகளிலும் 160 விருந்தினர்கள் வரை அமரலாம். 

திரையரங்கு வடிவம், வகுப்பறை, U வடிவம், banquet வடிவம் மற்றும் கொக்டெய்ல்கள் விருந்துகளுக்கேற்ற வகையில் இருக்கைகளை சரிசெய்து கொள்ள முடியும்.

தற்போது ‘டியூலிப்’ மற்றும் ‘செஃப்றோன்’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள 900 நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குழு அறைகளான ‘ஈ’ மற்றும் ‘எஃப்’ இல் 75 பேர் வரை பங்குபற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த இரு அறைகளிலும் திரையரங்கு, வகுப்பறை மற்றும் U வடிவிலும் இருக்கைகளை அமைத்துக்கொள்ள முடியும். மேலும் அனைத்து அறைகளும் ஒரே நேரத்தில் பல மொழிப்பெயர்ப்பு தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

“புதிதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள குழு அறைகள் எமது வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் ஆகும். வெறும் மாநாட்டு மண்டபமாக மட்டுமன்றி, அனைத்து விதமான நிகழ்வுகளையும் முன்னெடுக்கக்கூடிய நிலையமாக திகழ்கிறது.

மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் எமது ஸ்தானத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய பெயர்மாற்றங்களை செய்துள்ளோம்” என BMICH நிகழ்ச்சி மற்றும் முன்பதிவுகளுக்கான முகாமையாளர் மஹேஷ் அமரசிங்க தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு BMICH இன் நிபுணத்துவ உள்ளக குழுவின் மூலம் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

திறன் மற்றும் அனுபவத்தை கொண்டுள்ள இக்குழுவினர் எவ்வித தடங்கலுமின்றி நிகழ்ச்சி இடம்பெறுவதை உறுதி செய்கின்றனர். மிகப்பெரிய வாகன தரிப்பிடத்தையும் கொண்டுள்ளது. மேலும் இங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலான மவுண்ட்லவேனியா ஹோட்டல் மூலமாக உணவு பங்களிப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.