ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மத தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரானில் மத தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, அந்த நாட்டின் அதிகாரம் மிக்க தலைவராக உள்ள நிலையில், அவருக்கு உயர்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஈரானில் பொது மற்றும் புரட்சிகர நீதிமன்றங்களினால் தண்டித்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவையொட்டி இந்த பொது மன்னிப்பை அவர் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.