மாமனாரை கொலைசெய்த மருமகனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் நேற்று முன்தினம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் கடந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான பணக் கொடுக்கல் வாங்கல் தகராறுடன் கூடிய  முறுகல் நிலையைத் தொடர்ந்து. 

இதனையடுத்து மெனிக்பாம் கிராமத்தில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மாமனாரை நள்ளிரவு வேளையில்  கோடரியால் தாக்கி கொலைசெய்ததாக குறித்த மருமகன்  குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. 

2018.08.20 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர்  வவுனியா மேல்நீதி மன்றினால்  குறித்த நபருக்கு நேற்று முன்தினம் 04.11 மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.