அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய மாநிலங்களில் ஒன்றான ஜோர்ஜியா மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2,449,580 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 2,448,484 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

இந்நிலையில்,  ஜோ பைடன் 1096 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய தரவுகளின்படி, பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட்  ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். 

ஜோ பைடனுக்கு 50.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

முன்னாள் துணை ஜனாதிபதியான பைடனுக்கு அமெரிக்காவின்  46 ஆவது ஜனாதிபதியாக வருவதற்கு ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது. 

இந்நிலையில், மறுதேர்தலைக் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். 

தற்போது அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா (3), ஜோர்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது.

இந்நிலையில் ஜோர்ஜியாவில் ஜோ பைடன் 24,49,580 வாக்குகள் பெற்று 1096 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். 

ட்ரம்ப் 24,48,484 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளதாக தற்போதைய அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1992 முதல் ஜனாதிபதித் தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் எந்த ஜனநாயகக் கட்சியினரும் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 4 ஆம் திகதி முடிவடைந்ததிலிருந்து வாக்குகள் எண்ணும் தீவிரமாக நடை பெற்று வருகின்றது.