சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, Sony நிறுவனத்தின் பிரதிநிதித்துவ அலுவலகத்துடன் இணைந்து இலங்கை உள்நாட்டுச் சந்தையில் Sony Xperia Z5, Xperia Z5 Compact ஸ்மார்ட்போன்கள் மற்றும் 4K ஸ்மார்ட்போன் Xperia Z5 Premium ஆகிய பிரதான உற்பத்திகளை அறிமுகம் செய்துவைத்துள்ளது. 

இதனைஅறிமுகப்படுத்தும் வகையில் கொழும்பு 02,சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றவிமரிசையானநிகழ்வொன்றில் Sony நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசியா மற்றும் இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகத்தின் தலைமை பிரதிநிதியான அலெக்ஸ் யீ,சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறைபணிப்பாளரானமகேஷ் விஜேவர்த்தனஆகியோர் கலந்துசிறப்பித்தனர். 

சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகியநாடுகளிலுள்ள Sony இன் படைப்பாக்கநிலைய ஸ்டூடியோக்களில் முன்னணிபடைப்பாக்கசிந்தனைகளின் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ள Xperia Z5 ஆனது ஒரு உலோகச் சட்டம் மற்றும் பளிங்கு கண்ணாடியிலான பின்புறத்துடன் மெல்லியஉடலமைப்பைக் கொண்டுள்ளது. 

அதன் வன்மை,தினசரிவசதிக்காகதண்ணீர் உட்புகாதுசௌகரியமாகவைத்திருக்கக்கூடியது. 5.2 அங்குலமுகத்திரை, மெல்லியதோற்றம் மற்றும் Fall 2015 fashion, உட்புறவடிவமைப்புபின்னல்கள் போன்ற அம்சங்களுடன் எந்தவிதமான தனிப்பட்டவிருப்பத்திற்கும் ஏற்றவகையில் கவர்ச்சியும், உணர்வுவெளிப்படுத்தலும் கொண்ட வெள்ளை , கறுப்பு, பொன்னிறம் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றது.  

Sony நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்திற்கான தலைமைப் பிரதிநிதியான அலெக்ஸ் யீ கூறுகையில்,

“வடிவமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றில் தனித்துவமான வேறுபாடுகளுடன் எமது நவீனதொழில்நுட்ப புத்தாக்கத்தை இலங்கையில் அறிமுகம் செய்துவைப்பதையிட்டுநாம் மிகவும் மகிழ்ச்சிஅடைந்துள்ளதுடன், உங்களுடைய வாழ்க்கை முறைக்கேற்ற மிகச் சிறந்த துணையாக Xperia Z5 உற்பத்தி வரிசை உள்ளதுடன், ஸ்மார்ட்போனில் பொழுதுபோக்குதுறையில் விசேடகவனம் செலுத்தியுள்ளதையும் உறுதிசெய்கின்றது”. 

கச்சிதமான ஸ்மார்ட்போன் ஒன்றை விரும்புகின்றவர்களுக்கு சட்டைப்பையில் வைக்கக்கூடிய கையடக்கமான சாதனமாக மகத்தான கமராதொழில்நுட்ப அம்சங்களுடன் Xperia Z5 Compact தற்போதுகிடைக்கப்பெறுகின்றது. மிக அழகாக கையடக்கமாக வடிவமைக்கப்பட்டு, 4.6 அங்குல முகத்திரையுடன் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களும் இன்றியசெயல்திறனை இது வழங்குவதுடன்,ஒருகையால் பாவிப்பதற்கு மிகவும் உகந்த ஒரு தெரிவாகவும் உள்ளது. 

மஞ்சள், பவளம், வெள்ளை மற்றும்  கறுப்பு அடங்கலாக உங்களது தனிப்பட்ட பாணியையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த இடமளிக்கும், புத்தம் புதிய, துடிப்பான நிறங்களில் Z5 Compact கிடைக்கின்றது.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான மகேஷ்  விஜேவர்த்தன கூறுகையில்,

“புத்தாக்கத்தைத் தழுவி,வர்த்தகநாமம் ஒன்று எமக்கு வழங்குகின்ற பெறுமதியை அனுபவிக்க விரும்புகின்ற தனித்துவமான வாடிக்கையாளர்கள் பிரிவை இலக்காகக் கொண்ட Sony கையடக்கத் தொலைபேசிகள் அவற்றின் வர்த்தகநாமம், வடிவமைப்புமற்றும் உற்பத்தி என அனைத்து அம்சங்களிலும் தனித்துவமானவை”.

Xperia Z5மற்றும் Xperia Z5 Compact ஆகியன Sony இன் சிறப்பான, இரு தினங்கள் வரைநீடித்துஉழைக்கும் வியத்தகு மின்கலத்தையும், மின்வலுவைசேமிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளதுடன், அது உங்களுக்கு நீடித்து உழைக்கும் மின்கலத்தின் செயற்திறனை வழங்குகின்றது. உலகின் முதலாவது 4K ஸ்மார்ட்போன் உற்பத்தியான Xperia Z5 Premium ஆனது மொபைல் மற்றும் IPS இற்கான கூர்மையான vivid 5.5” 4K TRILUMINOSTM முகத்திரையைக் கொண்டுள்ளதுடன், எந்தவொரு சிறிய அசைவும் மிகத் துல்லியமாக படம்பிடிக்கப்படுவதுடன், பூரண HD தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு பிரிதிறன் கொண்டது. Netflix, YouTube அல்லதுநீங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகப் போக்குகையில் எடுக்கும் புகைப்படங்களை வலிமையான 4K துல்லியத்துடன் பார்க்கும் வகையில் மூன்றாம் தரப்பு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மேம்படுத்தும் முகமாக Xperia Z5 Premium ஆனது உங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களை 4K இற்குதரமுயர்த்துகின்றது. 

Xperia Z5 ஆனது ரூபா 119,999 என்ற விலையிலும் ,Xperia Z5 Compact ஆனது ரூபா 99,999 என்ற விலையிலும், Xperia Z5 Premium ஆனது ரூபா 134,999 என்ற விலையிலும் முறையேகிடைக்கப்பெறுகின்றன. Sony கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும், சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ், மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள்,அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட சில்லறை வியாபார காட்சியறைகள் மற்றும் நாட்டில் 1500 கையடக்கத் தொலைபேசி முகவர் நிலையங்களைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் ஊடக விநியோக மார்க்கம் அடங்கிய நாட்டின் மிகப் பாரிய சில்லறை விற்பனை வலையமைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.