சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக்கவசங்கள் அணிதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறியமை தொடர்பில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறுவுறுத்தலுக்கமைய சட்டநடவடிக்கையும் எடுக்கப்படும்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 2,532 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 382 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிவரையில்  மாத்திரம் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 26 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.