(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு மாவட்டத்தில் 2000 ஆயிரம் பேர் மாத்திரம் கொவிட்-19 வைரஸ்  தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனால்  சுமார் 20000 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

கொழும்பு மாவட்டத்தில்  சுய தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு அரசாங்கம் இரு வாரகாலத்துக்கு வழங்கும் உலர் உணவு பொதிகள் இதுவரை கிடைக்காதவர்கள் தமக்கு அறிவிக்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் கிடைக்காதவர்கள் 011 236 9139 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது.