அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 24  மணி நேரத்தில் 123,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 100,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.

கொலராடோ, இல்லினாய்ஸ், மினசோட்டா, பென்சில்வேனியா, உட்டா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் வியாழக்கிழமை நாளாந்த புதிய கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் 9,606,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 24  மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 1,226 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 234,911 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 53,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் 48,625,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,1,232,516 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.