இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ள 3 வயது ஆண் குழந்தையை மீட்கும் பணி 3 நாட்களாக தொடர்ந்த வண்ணமாகவுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா கிராமத்தில் 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
மூன்று நாட்களாக மீட்பு பணி தொடர்கின்ற நிலையில், மொத்தம் ஆறு ஜே.சி.பி இயந்திரங்கள் அந்த இடத்திலுள்ள ஆழ்துளை கிணற்றைச் சுற்றி தொடர்ந்து தோண்டப்பட்டும், குழந்தைக்கு தொடர்ந்து ஒக்சிசன் வழங்கப்பட்டும் வருகிறது.
குழந்தை சுமார் 60 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
புதன்கிழமை காலை 9 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில், பிருத்விபூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காலை 10 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்துள்ளார்.
ஒரு இராணுவக் குழுவும் மதியம் ஒரு மணிக்கு அந்த இடத்தை அடைந்துள்ளது. இந்நேரத்தில், ஆழ்துளை கிணற்றில் ஒரு கமரா மூலம் குழந்தையின் நிலை அறியப்பட்டுள்ளது.
குழந்தை இரவு பார்வை சாதனங்களுடன் மாலை வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றது.
இதனையடுத்து புதன்கிழமை இரவு மீட்புக் குழு அந்த இடத்தை அடைந்துள்ளது.
மீட்புக் குழு தற்போது குழந்தை ஆழமாக ஆழ்துளை கிணற்றிற்குள் செல்வதைத் தடுக்க முயற்சித்து வருகிறது.
தற்போது, ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக 60 அடி குழி தோண்டப்பட்டுள்ளது.
இப்போது, பினாவிலிருந்து ஒரு உயர் தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் 20 அடி அகல சுரங்கப்பாதை தோண்டப்பட்டு வருகிறது.
.இதற்கிடையில், குழந்தையை மீட்க கிராமத்தில் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM