தேர்தலில் மோசடி : மீண்டும் ட்ரம்ப் குற்றச்சாட்டு

06 Nov, 2020 | 07:17 AM
image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020 இல் மோசடி இடம்பெற்றுவருவதாக அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய ட்ரம்ப்,

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மோசடி நடந்து வருகின்றது.

சட்டப்படி வாக்குகள் எண்ணப்பட்டால் எளிதாக நான் வெற்றி பெறுவேன். 

சட்ட விரோதமாக வாக்குகள் எண்ணிக்கை நடந்தால் தான், அவர்கள் எங்களிடமிருந்து வெற்றியை பறிக்க முடியும். 

பல மாகாணங்களில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நாம் பெற்றுள்ளோம்.

தேர்தலில் நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன்.

ஆனால் தேர்தலில் மோசடி நடந்து வருவதற்கான ஏராளமான சான்றுகள் எங்களிடம் உள்ளன. 

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க இன்னும் சில வாக்குகளே உள்ளன.

ஜனநாயக கட்சியினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

குடியரசு கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை. நாம் வெற்றி பெற வேண்டிய பல இடங்களில் வாக்குகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டுவிட்டது.

இந்த மோசடிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் எனத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

தற்போதைய தரவுகளின்படி, ஜோ பைடன்  264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட்  ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பைடனுக்கு 50.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35