கொரோனாவால் இறுதியாக உயிரிழந்த 5 பேரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள்

05 Nov, 2020 | 10:58 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை மாத்திரம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கையில் ஒரே நாளில் 5 மரணங்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு உயிரிழந்த அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட குறித்த 5 மரணங்களில் இருவர் நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதோடு ஏனைய மூவரும் அவரவர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை உயிரிழந்த இருவரைத் தவிர ஏனைய மூவரும் தொற்றுக்குள்ளாயிருந்தமை அவர்களது மரண பரிசோதனைகளின் பின்னரே உறுதிப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிம்புர ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த நபர் நீண்ட நாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 68 வயதுடைய பெண்னொருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் அவரது இல்லத்திலேயே உயிரிழந்த நிலையில் , மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட இதய பாதிப்பின் காரமணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தில் தனது வீட்டிலேயே உயிரிழந்த 73 வயதுடைய பெண்னுக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கொவிட் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 பிரதேசத்தில் தனது இல்லத்திலேயே உயிரிழந்த 74 வயதுடைய ஆணுக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. மரண பரிசோதனையின் பின்னர் அவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 தாக்கத்தால் ஏற்பட்ட இதய பாதிப்பின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுக்கமை இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05