ikman.lk தனது புதிய சேவை ஒன்று பற்றி தனது இணையத்தில் இன்று அறிவித்துள்ளது. பொருள்களை விற்போருக்கும் வாங்குவோருக்குமான பாரிய வசதிகள் கருதி இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையானது Buy Now என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஊடாக பொருள்களை விற்பனை செய்பவர்கள்  ikman.lk  ஊடாக தமது கொள்வனவாளர்களுக்கு ஒரு குறைந்த கட்டணத்தில் நேரடியாக விநியோகம் செய்ய முடியும்.

இலத்திரனியல் பொருள்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள், நவநாகரிக பொருள்கள், சுகாதார மற்றும் அழகுசாதன பொருள்கள், விளையாட்டு பொருள்கள், சிறுவர்களுக்கான பொருள்கள் என்பன தற்போது Buy  Now திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன வகைப்படுத்தலிக் கீழ் ஒரு விற்பனையாளர் ஏதாவது ஒரு பொருளை விற்பனைக்காக போட்டால் அதை வாங்க முயற்சி செய்து ஒரு கொள்வனவாளர் ikman.lk  ஊடாக அணுகும் போது அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வனவுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பின்னர் விற்பனையாளருக்கு அறிவிக்கப்பட்டு அவரிடம் இருந்து அந்த பொருள் பெறப்பட்டு கொள்வனவாளரிடம் ஒப்படைக்கப்படும். கொள்வனவாளரிடமிருந்து பணமும் வசூலிக்கப்பட்டு அது விற்பனையாளரின் கணக்கில் சேர்க்கப்படும். இந்த Buy Now முறை இருதரப்புக்கும் பாரிய வசதியை வழங்குகின்றது. விற்பனையாளரும் வாங்குபவரும் நீண்ட தூரங்களில் இருக்கும் போது அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டிய தேவையை இந்த முறை தடுக்கின்றது. சந்திப்பு இன்றியே இருதரப்பும் ஒரு கொடுக்கல் வாங்கல் மூலம் ஒன்றிணையும் வாய்ப்பை இது வழங்குகின்றது. வெளி இடங்களுக்கும் கூட பொருள்களை கொண்டு சென்று ஒப்படைக்கும் பொறுப்பை ikman.lk ஏற்றுக் கொள்வதால் வாடிக்கையாளர்களுக்கு இது சௌகரியத்தை அளிக்கின்றது.

பொருளின் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விகிதாசார கட்டணத்தில் கொழும்பு மாவட்டத்துக்குள் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் ஒரு கட்டணத்தின் அடிப்படையில் சில வெளி இடங்களுக்கும் பொருள்களை கொண்டு செல்லும் பொறுப்பை  ikman.lk ஏற்றுக் கொள்ளும்.

ikman.lk இன் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பணிப்பாளர் ஸ்டீபன் பீக்மெயர் இந்த புதிய சேவையின் அறிமுகம் பற்றி கருத்து வெளியிடுகையில் ‘ikman.lk ஆரம்பிக்கப்பட்டது முதல் மேலதிக பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. இந்த வசதிகள் பாவனையாளர்களுக்கு பெரும் பயனை அளிக்கின்றன. அந்த வகையில் சேவையுடன் இணைந்த மற்றொரு சேவையாகவே Buy Now திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொருள்களை கொள்வனவாளர்கள் விருப்புடன் பெற்றுக் கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விற்பனையாளர்களும் தமது பூகோள நிலைகளைக் கருத்திற் கொள்ளாமல் எந்த இடத்துக்கும் தமது பொருள்களை விற்பனை செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது” என்றார்

Buy Now திட்டத்தை பயன்படுத்தி மைஅயn.டம ஊடாக ஒரு தொலைபேசியை கொள்வனவு செய்த முல்லேரியா புதிய நகரைச் சேர்ந்த திவங்கா லியனகே இதுபற்றிக் கூறுகையில் “பிலியந்தலை ட்ரீம் மொபைல்ஸ்ஸில் இருந்து நான் ஒரு தொலைபேசியை ikman.lk ஊடாக கொள்வனவு செய்தேன். அவர்கள் அதை எனது வீட்டுக்கே கொண்டு வந்து தந்தார்கள். இணையத்தில் விவரிக்கப்பட்டிருந்த அதே பொருள் தான் எனக்கு வழங்கப்பட்டது. இந்த சேவை வசதியானது மட்டும் அல்ல நம்பத் தகுந்ததுதம் கூட” என்றார்.

Ikman.lk  இடமிருந்து வழங்கப்படும் இந்த வகை சார்ந்த மற்றொரு முதலாவது சேவை இதுவாகும். இலங்கையில் வகைப்படுத்தல் துறை சேவைகளில் முன்னோடி சேவைகளை அறிமுகம் செய்யும் நிறுவனம் என்ற பெருமையை அது மீண்டும் ஒருமுறை தக்க வைத்துள்ளது. Ikman.lk அறிமுகம் செய்துள்ள பல புதிய சேவைகளில் இதுவும் ஒன்றாகும். எதிர்காலத்தில் இன்னும் பல உன்னதமான சேவைகள் காத்திருக்கின்றன.