கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

46 ,68, 58, 73 மற்றும் 74 வயதுடைய 03 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் விபரம்...

01. ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட நிலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு  02 ஐ சேர்ந்த 46 வயது ஆண் நபர் நேற்று ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் ஒரு  நீரிழிவு நோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. வெல்லம்பிடியை சேர்ந்த 68 வயது பெண் நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

03.கொழும்பு 12 ஐ சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

04. கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட நுரையீரல் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

05. கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயது ஆண் ஒருவர் அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.