தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் தனிமைப்படுத்தப்படவர்கள் குறித்தும் அப்பிரதேசம் குறித்தும் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Image

இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்தில்  கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இடம்பெற்ற  கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தொடர்ந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சமூகத்தில் காணப்படலாம், அவர்களுடன்  தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவ்வாரான பகுதிகளை தனிமைப்படுத்தி  கவணிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பொருளாதார மையங்களை மொத்த வர்த்தகத்திற்கு மட்டுப்படுத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது, சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான பி.சி.ஆர் சோதனைக்கு அமைய வர்த்தகம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சு மற்றும் கடற்படையின் மேற்பார்வையில் வர்த்தக மையங்களில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் சோதனைகளை நடத்தவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.