வவுனியா பால் சபையில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

Published By: J.G.Stephan

05 Nov, 2020 | 08:44 PM
image

வவுனியா பசார் வீதியிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் பால்சபையில் விரத காலங்களை முன்னிட்டு பால் பதனிடும் பொருட்களான பன்னீர் ஒரு கிலோ 1,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் விரதங்களை கடைப்பிடித்து வரும் வசதியற்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் விரத காலங்களில் சைவ உணவுகளை உட்கொண்டு விரதம் கடைப்பிடிப்பவர்கள் சைவ உணவான எவ்வித கலப்பிடமற்ற பன்னீரை ஆர்வத்துடன் தமது அன்றாட உணவுடன் சேர்த்து உண்டு வருகின்றனர் .

இதனால் பால்சபையில்  பன்னீருக்கு  தட்டுப்பாடு நிலவி வருகின்றது எனினும் வசதியற்ற மக்கள் பெரிதும் பால்சபைகளில் இதனைப்பெற்று வருகின்ற போதிலும் நேற்று மாலை வவுனியா பசார் வீதியிலுள்ள பால்சபையில் 250 கிராம் பன்னீர் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

விலை அதிகரிப்புக் குறித்து வினவியபோது தற்போது பசும் பால் பெரும் தட்டுப்பாடு எனவே இவ்வாறான விலைக்கே விற்பனை செய்யவேண்டியுள்ளதாக பால் சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார் . 

கால்நடை உற்பத்தியாளர்கள் தமது உள்ளூர் உற்பத்திகளை பால் சபைகளுக்கு வழங்கி வருகின்றபோதிலும் அதில் இலாபம் பெறும் நோக்கில் வசதியற்ற மக்களிடம் இலாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கால் நடை வளர்ப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் அரச கூட்டுறவு திணைக்களத்தின் மேற்பார்வையில் இயங்கும் நிறுவனங்களான பால் சபை இலாப நோக்குடன் செயற்படுவதாகவும் வசதியற்ற மக்கள் இவ்வாறான செயற்பாடுகளினால் பெரும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையங்களில் உயர் அதிகாரிகள் தலையீடு செலுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர் . 

இவ்விடயம் குறித்து வவுனியா பசார் வீதியிலுள்ள பால்சபை தலைவரிடம் தொடர்பு கொண்டபோது , 

தற்போது பசும் பாலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது எதிர்பார்க்கின்றளவு பால்கள் சபைக்குக் கிடைப்பதில்லை.

இதனால் பன்னீர் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில பால் பண்டங்களுக்கு அதிக பசும் பால் தேவை ஏற்படுகின்றது. எனினும் பன்னீர் ஒரு கிலோ 830 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் பால்பண்டங்கள் விற்பனை, பசும் பால் கொள்வனவு செய்து அதில் கிடைக்கும்  இலாபத்தில் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் என்பன வழங்கப்பட்டு பால் சபையை நடாத்தி வருவதாகவும் எமது சபைகளுக்கு வேறு வருமானங்கள் கிடைப்பதில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை...

2024-07-22 23:34:52
news-image

இலங்கையில் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை பலிகொள்ளக்கூடிய...

2024-07-22 22:32:21
news-image

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்...

2024-07-22 17:16:25
news-image

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா...

2024-07-22 22:02:03
news-image

இந்து சமுத்திரத்தின் சுதந்திரம் மற்றும் பிராந்திய...

2024-07-22 21:54:12
news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24