கஞ்சாவை தம்வசம் விற்பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை நேற்றிரவு  கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான மூன்று சந்தேக நபர்களிடமிருந்தும் 16800 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் முறையே 18, 20, 22 வயதுகளையுடையவர்கள் என்றும் மூவரும் ஏறாவூர் - 2, பள்ளியடி வீதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.