15 வயது நிரம்பிய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய  முயற்சித்த இளைஞரையும் ,பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றுமொரு இளைஞனையும் கைது செய்துள்ள பள்ளம பொலிஸார்,பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவை தேடி வலைவீசியுள்ளனர்.

குறித்த மாணவியினை கடந்த 17 ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது அயல் வீட்டில் வசித்துவந்த குறித்த இளைஞர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்சித்துள்ளார்.

இதை தொடர்ந்து குறித்த மாணவி  பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்ததையடுத்து பல்லம பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, இதற்கு முன்னர் பிக்கு ஒருவரும் , இளைஞனொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

பக்தி பாட்டு போட்டியிற்காக கொழும்பு பிரதேசத்தியிலுள்ள விகாரையொன்றிற்கு வந்த போது, பக்தி பாடல் எழுதி தருவதாக கூறி குறித்த மாணவியை பிக்கொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் மேலுமொரு இளைஞர் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை மேலதி விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதுவரையில் குறித்த மாணவியின் பெற்றோர் எதுவும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியினை பாலியல் துஷ்பிரியோகத்திம் செய்த  மற்றைய இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிக்குவினை தேடி பள்ளம பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.