வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1154 பேர் வவுனியா பம்பைமடு இராணுவமுகாம், பெரியகட்டு இராணுவமுகாம், வேலங்குளம் விமானபடைத்தளம், பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவர்களில் 127 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 990 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தங்களது வீடுகளிற்கு திரும்பியுள்ள நிலையில்,  வேலங்குளம் முகாமில் மாத்திரம் 37 பேர் வரையில் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.