அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில்  பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதும், மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை  மேற்கொண்டுள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் சிறிதுநேரம் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ள போதும், தாக்குதல்தாரி தப்பிச் சென்றுள்ளார்.

 சம்பவத்தில் காயமடைந்து பெண் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.