சீனாவின் வடமேற்கிலுள்ள ஷாங்க்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளாதடு, 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

நிலக்கரி சுரங்கத்தில் சந்தேகத்திற்கிடமான  எரிவாயு வெடித்ததுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போனதாக நம்பப்படுபவர்களை தேடி வருகின்றனர்.

42 சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த குறித்த சுரங்கத்தில், விபத்து மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது. அவர்களில், 34 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த நான்கு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

வல்லுநர்கள் சுரங்கத்தின் கீழ் எரிவாயு வெளியேற்ற முறைகள் மற்றும் சுரங்கத்தின் கீழ் காற்றோட்டம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பயன்படுத்தி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.