பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் சக நாட்டு வீரரான லோபஸை வீழ்த்தி, ரஃபேல் நடால் டென்னிஸ் அரங்கில் ஆயிரம் வெற்றிகளை பதிவுசெய்துள்ளார்.

தனது பிரெஞ்சு ஓபன் வெற்றியின் பின்னர் முதல் முறையாக விளையாடும் ஸ்பெய்ன் வீரர் நடால், புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் சக நாட்டு வீரர் லோபஸை எதிர்த்து போட்டியிட்டார்.

சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த ஆட்டத்தில் நடால் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் லோபஸை வீழ்த்தனார்.

இந்த வெற்றியின் மூலம் நடால் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளை பதிவுசெய்தோருக்கான பட்டியலில் ஜிம்மி கான்னர்ஸ்  (1,274) ரோஜர் பெடரர் (1,242), இவான் லென்ட்ல் (1,068) ஆகியோருக்கு அடுத்ததாக இடம் பிடித்தார்.