கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற அலுவலகம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொழும்பு, மத்திய அஞ்சல் பரிமாற்ற அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் உயர் அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.