ஹட்டன், தும்புருகிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று (04.11.2020) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.எஸ். மெதவல தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பைப் பேணிய 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான குறித்த பெண் கடந்த 2 ஆம் திகதி ஹட்டன், கார்கில்ஸ் புட்சிட்டிக்கு சென்றுள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. 

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.