பாணந்துரை, வட்டுவ பிரதேச கடற்பரப்பின் ஆழமற்ற பகுதியில் கரையொதுங்கிச் சிக்கித் தவித்த 120 க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களை பாதுகாத்து மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்ப அயராது சிரமப்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிடத்தில் வேரூன்றியுள்ள அகிம்சையின் நற்பண்புகளை உலகுக்கு நிரூபிக்கும் மற்றுமொரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாணந்துரை கடற்கரையில் சிக்கித் தவித்த சுமார் 120 க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்களை பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை, பொலிஸ் உயிர் காக்கும் குழுக்கள், தன்னார்வ உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்டோர் நடவடிக்கைகளை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.