அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா

05 Nov, 2020 | 07:41 AM
image

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

தீவு நாடான தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. 

ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தாய்வானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் 2.37 பில்லியன் டொலர் மதிப்புடைய 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை தாய்வானுக்கு விற்பனை அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 600 மில்லியன் டொலர் மதிப்பில் ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா விமானங்களை தாய்வானுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,

 “தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்கா சீனாவின் உள் விவகாரங்களில் மிருகத்தனமாக தலையிடுகிறது. மேலும் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பு நலன்களையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

சீன - அமெரிக்க உறவுகளால் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற அனைத்து விற்பனையிலும் அமெரிக்கா இரத்துச் செய்ய வேண்டும். இல்லையென்றால்  இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சரியான மற்றும் தேவையான பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05