அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.

இந்நிலையில் எவர் 270 என்ற இலக்கை முதலில் அடைகின்றார்களோ அவரே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்று அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போதைய அமெரிக்க தேர்தல் நிலைவரத்தின் படி ஜனநாயக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் 270 என்ற இலக்கத்தை நோக்கி நெருங்கி வருகின்றார்.

அதன்படி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 214 வக்குகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

தற்போதைய நிலையில் பைடன் 264 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் ஜனாதிபதி ட்ரம்ப் 214 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும். தற்போது பைடன் வெற்றிபெற இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவையாகவுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் பைடன் வென்றதால் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

அங்கு நெருக்கமான போட்டி நிலவி வந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் இங்கு இருக்கும் எலக்ட்ரல் வாக்குகள் பைடனுக்கு கிடைத்தது. இதனால் அவர் முன்னிலை வகிக்கிறார். ஜோர்ஜியா, வட கரோலினா, பென்சில்வேனியாவில் ட்ரம்ப் மயிரிழையில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதில் வட கரோலினா, பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. 

இந்த மாகாணங்கள் பாரப்பரியமான ஜனநாயக கட்சி மாகாணங்கள் ஆகும். இதன் காரணமாக பைடன் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 50.3% (71,452,650) மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார் ஜோ பைடன், 48% (68,223,592) மக்கள் வாக்குகளை ட்ரம்ப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை விட, எலக்ட்ரல் வாக்குகள்தான் ஜனாதிபதியை தெரிவு செய்யும். 

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரநிதிகள் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை பொறுத்து எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். 

உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 53 பிரநிதிதிகள் மற்றும் 2 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அங்கு மொத்தம் 55 எலக்டர்ஸ் உள்ளனர்.

மொத்தமாக ஒரு மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக மக்கள் வாக்கு வருகிறதோ,  அங்கு இருக்கும் அனைத்து எலக்டர்ஸ் வாக்குகளும் அந்த குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கே வழங்கப்படும். 

உதாரணமாக கலிபோனியாவில் பைடன் 51% மக்கள் வாக்குகளை வென்று டிரம்ப் 49 % வாக்குகளை வென்றால், மொத்தமாக கலிபோனியார்னியாவில் உள்ள 55 எலக்டர்ஸ் வாக்குகளும் பைடனுக்கே வழங்கப்படும்.

மொத்தமாக பைடன் அங்கு வென்றதாக அறிவிக்கப்படும்.இப்படி முக்கியமான மாகாணங்களில் பைடன் வென்று இருக்கிறார். இதனை காரணமாகவே தற்போது பைடன் மொத்த எலக்டர்ஸ் வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார்.

மொத்தமா 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். 

பெரும்பாலும் மக்கள் அதிகம் வாக்களிக்கும் வேட்பாளருக்கே எலக்ட்ரல் வாக்குகளும் அதிகம் கிடைக்கும் என்பதால் இந்த முறை ஜோ பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

எதற்கும் இறுதி முடிவுவெளியாகும் வரை பொறுத்திருந்திருந்து பார்ப்போம்.

ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா ? பைடனா ?