இங்கிலாந்தின் 2 ஆம் முடக்கல் நிலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்

Published By: Vishnu

05 Nov, 2020 | 07:14 AM
image

பிரிட்டன் அரசியல் பிரதிநிதிகள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து, இங்கிலாந்தின் ஒரு மாத கால முடக்கலுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இங்கிலாந்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது முடக்கல் நிலையானது வியாழக்கிழமை நடைமுறைக்கு வரவுள்ளது. 

இந் நிலையிலேயே முடக்கல் நிலைக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இங்கிலாந்தின் கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளமையினாலும், கொவிட்-19 இரண்டாவது அலை ‍தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் போரிஸ் ஜோன்சன் தேசிய முடக்கல் நிலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 1.1மில்லியனை கடந்துள்ளமையினாலும், கொவிட்-19 இரண்டாவது அலை ‍தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கும் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் போரிஸ் ஜோன்சன் தேசிய முடக்கல் நிலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் கல்வி, தொழில், உடற்பயிற்சி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவது அல்லது நோயாளர்களை கவனித்தல் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக மாத்திரம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறந்த நிலையில் இருக்கும். பப்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதுடன் அனைத்து அத்தியாவசிய சில்லறை விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

கடந்த மார்ச் 23 முதல் ஜூலை 4 வரை நீடித்த இங்கிலாந்தின் முதல் தேசிய முடக்கலுக்காக ஜோன்சன் அரசியல் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டார்.

அவர் மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அம் மாத இறுதியில் குணமடைந்தார்.

இங்கிலாந்தில் தற்போது 1,102,304 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 47,832 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10