அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பெரும் பகுதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்னதாக டிரம்ப் தமது  டுவிட்டரில் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் விடுத்துள்ள டுவிட்டரில் பதிவில், 

‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமாக உள்ளன. அமெரிக்காவின் பல முக்கிய மாநிலங்களில் நேற்றிரவு நான் முன்னிலையில் தான் இருந்தேன். திடீரென சில வாக்குச்சீட்டுகள் எண்ணத் தொடங்கியதால் முடிவுகள் லேசாக மாறத் தொடங்கின’. என தெரிவித்துள்ளார்.

The first Trump v. Biden presidential debate was a hot mess - Axios

இதேவேளை, 

தேர்தல் நிலவரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் உரையாற்றியிருந்த டிரம்ப்: 

இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜோ பைடன் “டிரம்பின் இந்த குற்றச்சாட்டு மூர்கத்தனமானது, முன்னோடியில்லாதது மற்றும் தவறானது. இதன்மூலம் அமெரிக்க குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க டிரம்ப் முயற்சிப்பதாக பைடன் சாடியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 238 இடங்களிலும் , டிரம்ப் 214  இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளனர். 

எனினும் பெரும்பான்மையை பெற 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில் பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.