அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் பதிவு தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறன. 270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 213 கைப்பற்றியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,

நாம் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளளோம், ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர். ஒருபோதும் அவர்கள் சதி செய்ய விடமாட்டோம். வாக்கு சாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது! என ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவை தொடர்ந்து, நான் இன்று இரவு ஒரு அறிக்கையை வெளியிடுவேன். மாபெரும் வெற்றி! என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் சதி செய்வதாக ட்ரம்ப் பதிவிட்ட சர்ச்சைக்குரிய டுவிட் சமூகத்தை தவறாக வழிநடத்தக்கூடும் என்ற காரணத்துக்காக தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அந்த டுவிட்டில் பகிரப்பட்ட தகவல் டுவிட்டர் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ட்ரம்ப் அனுப்பிய ஒரு டுவீட்டை டுவிட்டர் ஒரு "சர்ச்சைக்குரியதுஎன கூறியது, அதில் அவர் "நாங்கள் பெரியவர்கள், ஆனால் அவர்கள் தேர்தலைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்" என்று ஆதாரமற்ற முறையில் கூறப்பட்டு உள்ளது.

"இந்த டுவீட்டில் பகிரப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சர்ச்சைக்குரியவை, மேலும் தேர்தலில் செயல்பாட்டில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றி தவறாக வழிநடத்தக்கூடும்" என்று டுவிட்டர் கூறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.