நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள் அனைவரும் முன்வரவேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக, முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் செயற்பட்டுவோரை அதிரடியாக கைது செய்வதாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர், இதுவரையில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய தினம்(03.11.2020) மேல் மாகாணத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரையில் மொத்தமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டும் 340 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.