அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் வாக்கெடுப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்நாட்டின் தேர்தல் வரலாற்றில்  ஒரு சுவாரஸ்ய நிகழ்வு பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில், நியூ ஹாம்ப்ஷயர் என்றொரு பகுதி உள்ள டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற சிறிய நகரத்தின் வாக்கெடுப்பு ஏனைய நகரங்களுக்கு முன்னதாக பதிவாகியதையடுத்து குறித்த பகுதியின் தேர்தல் முடிவுகளும் முதலாவது  தேர்தல் முடிவாக வெளியாகின.

 இதில் குறித்த நகரத்தின் அனைத்து வாக்குகளையும் ஜோ பிடன் பெற்று வெற்றி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு வாக்கு கூட இங்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதில் சுவாரஸ்ய என்னவென்றால்  டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற இந்த சிறிய நகரத்தின் 5 பேர் மட்டும் தான வாக்காளர்களாம். இவர்க ஐவரும் ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்குகள் எதுவும் கிடைக்காமல் குறித்த பிரதேசத்தில் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

ஆனால், இவ் நகரில் இருந்து 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகரான மில்ஸ்பீல்டுவில்  டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் 21 மக்கள் தொகை கொண்ட இந்த நகரிக்  21 வாக்காளர்களில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோ பிடனுக்கும் கிடைத்துள்ளன.